தஞ்சையில் மகளிர் சுய உதவிக்குழு பராமரிப்பில் வாகன நிறுத்துமிடம்: ஆட்சியர் திறப்பு

தஞ்சையில் மகளிர் சுய உதவிக்குழு பராமரிப்பில் வாகன நிறுத்துமிடம்: ஆட்சியர் திறப்பு
X

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இராஜ ராஜ சோழன் நினைவு மணி மண்டபத்தின் நுழைவாயிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் வாகன நிறுத்தம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகநகர்ப் புறவாழ்வாதார இயக்கம் மகளிர் சார்பில் மாமன்னர் இராஜ ராஜ சோழன் நினைவு மணி மண்டபத்தின் நுழைவாயிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் வாகன நிறுத்தத்தினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார் .

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடுமாநிலஊரகநகரப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் மாமன்னர் இராஜராஜ சோழன் நினைவு மணிமண்டபத்தை பார்வையிடதினசரி பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களை சீர்படுத்தும் நோக்கில் மணிமண்டபம் நுழைவாயிலில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு கட்டணமுறையில் நுழைவுசீட்டுவழங்கி பராமரிக்கும் பொருட்டு செம்பருத்தி மகளிர் சுய உதவிகுழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதுடன் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வருவாய் ஈட்டும் ஒரு உன்னதமுயற்சி ஆகும்என மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மைஅலகுதிட்ட இயக்குனர் லோகேஸ்வரி,வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன் , காவல் போக்குவரத்துஆய்வாளர் ரவிச்சந்திரன், இன்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!