பல்வேறு திட்டங்கள் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் வீரமரசன்பேட்டை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பங்கேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் வீரமரசன்பேட்டை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் சிறப்புகிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது..
அந்த வகையில் வீரமரசன்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதிசெலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சித் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம்,
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மைபாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை- உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை ,கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பூதலூர் ஊராட்சியும் ஆவாரம்பட்டியில் ராமசாமி, சக்திவேல் ஆகிய விவசாயிகள் நிலத்தினை பார்வையிட்டு நெல் உற்பத்தி அதன் கால அளவு மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கோ.பழனிவேல், பூதலூர் ஒன்றிய குழு தலைவர் ச.அரங்கநாதன் (எ) செல்லக்கண்ணு,உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.பொற்செல்வி, வே.ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசிசுரேஷ் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, சதயவிழாக்குழுத்தலைவர் து.செல்வம்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu