தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி : மாநகராட்சி ஆணையர்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில்  தடுப்பூசி : மாநகராட்சி ஆணையர்
X
தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் 1,550 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று 12 மையங்களில் 1,550 பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 பேருக்கும் , கரந்தை நகராட்சி பள்ளியில் 120 பேருக்கும், அண்ணா நகர் பள்ளியில் 150 நபர்களுக்கும், முனிசிபல் நகர் மாநகராட்சி பள்ளியில் 150 பேருக்கும், நாணயக்காரத் தெருவில் 150பேருக்கும், மகர்நோம்புச்சாவடி டி,இ,எல்.சி பள்ளியில் 100 பேருக்கும், சின்னக்கடைத் தெரு மாநகராட்சி பள்ளியில் 100 பேருக்கும், காந்தி வித்யாலயா பள்ளியில் 100 பேருக்கும் என மொத்தம் 9 மையங்களில் 1,350 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், தென்கீழ் அலங்கம் பள்ளியில் 200 பேருக்கு கோவாக்ஷீன் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு