தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி

தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி
X

தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும் நான்கு இடங்களில் தடுப்பூசி மையம்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களுக்கு ஒருநாள், முன்களப்பணியாளர்களுக்கு ஒருநாள் என அட்டவணை வெளியீட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் இன்று சிறப்பு முகாம் மூலம் நான்கு மையங்களில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலை 10 பணி முதல் தடுப்பூசி போடப்படுவதால், தாய்மார்களும் - கர்ப்பிணி பெண்களும் பயன்படுத்தி கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்