காசநோய் தொற்று கண்டறியும் நுண்கதிர் நடமாடும் வாகனம்: கல்வி அமைச்சர் தொடக்கம்
தஞ்சாவூரில் காசநோய் பரிசோதனை செய்யும் நடமாடும் வாகனத்தைத் தொடக்கி வைக்கிறார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மறைவு காசநோய் தொற்று (Latent TB Infection) கண்டறியும் நுண்கதிர் நடமாடும் வாகனத்தை; பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் காசநோய் தொற்று(டுயவநவெ வுடீ ஐகெநஉவழைn)கண்டறியும்நுண்கதிர் நடமாடும் வாகனத்தைமாண்புமிகுபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் (08.07.2022).கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக முதல்வர் கடந்த 01.07.2022 அன்று சென்னை நொச்சிக் குப்பத்தில் காசநோய் இல்வாத மிழ்நாடு 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்குரூ.10.85 கோடிமதிப்பீட்டில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும். நுண்கதிர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் மின்வசதி இல்லாத இடங்களில்கூட ஜெனரேட்டர் உதலியுடன் இயங்கவசதிசெய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதனவசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும். முகாம்களின் போதுபொதுமக்கள் வசதிக்காகநிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒருமணிநேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறள் கொண்ட இவ்வாகனங்களின் மூலம் தடப்பாண்டில் சுமார் 5 வட்சம் நபர்களுக்கு மறைந்திருக்கும் காசநோயை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காசநோய் அறிகுறி உள்ள 21.354 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 2860 நபர்களுக்கு காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 97 நோயாளிகள் முதன்மைசிகிச்சைக்குகட்டுப்படாததீவிரகாசநோயாளிகள் சிகிச்சைபெறும் அனைந்து காசநோயாளி களுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச் சத்திற்காக மாதந்தோறும் ரூ. 500 வழங்கப்பட்டுவருகிறது. காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குமாண்புமிகுதமிழகமுதல்வர் அவர்களால் வழங்கப்பட்டநடமாடும் நுண்கதிர் வாகனத்தைபயன்படுத்திதஞ்சாவூர் மாவட்டத்தில் மறைந்திருக்கும் காசநோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய அதிதீவிர காசநோய் பரிசோதனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் ஒருபகுதியாக இன்று தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மறைந்திருக்கும் காசநோய் தொற்று அபாயம் உள்ளதாக கருதப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். நெருக்கமான இடங்களில் குடியிருப்பவர்கள், ஏற்கெனவே காசநோய் சிகிச்சை எடுத்துகுணமாகி உள்ளவர்களின் வீட்டில் உள்ளவர்கள் சனி இருமல் தொந்தரவு உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளணளவர்கள் உடல் குறைவாக உள்ளதால் கடுமையான நோய்களுக்கு மெலிந்து காணப்படுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதுமுதிர்ந்தேர் போன்றவர்களைஅடையாளம் கண்டுஅவர்களுக்குபரிசோதனைமேற்கொள்ளப்படஉள்ளது.
இந்தபகுதிகளைதொடர்ந்துமாவட்டத்தில் உள்ளஅனைத்துபகுதிகளிலும் மறைந்திருக்கும் காசநோய் தொற்று இருக்கும் எனசந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரையும் இந்தவகனத்தின் மூலம் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட காசநோய் மையம் மூலமாகநடமாடும் நுண்கதிர் வாகளத்தின் தினசரி பயன்பாடு துண்ணோக்கி பரிசோதனை மையங்களின் செயல்பாடுகள் CBNAAT மற்றும் NAAT கருவிகள் உபயோகிப்பதை அதிகரித்தல் களப்பணியாளர்களின் மனிதவளத்தை பயன்படுத்துதல்,காசநோய் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துஉதவிகளை பெற்று தருதல் காசநோய் தோற்று பரவும் இடங்களை கண்டறிந்து முகாம்களை நடத்துதல், தனியார் காசநோய் சிகிச்சை மற்றும் மருந்து விற்பனையை தொடர்ந்து கணகாணித்தல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி 2025க்குள் காசநோய் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற இலக்கை அடைவோம் என பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்
இந்நிகழ்ச்சியில் திருவையாறுச ட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரன்,காசநோய் துணை இயக்குனர் மரு.மாதவி, உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் மரு.பிரபு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவஅலுவலர் மரு.பசுபதீஸ்வரன் மற்றும் அரசுஅலுவலர் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu