தஞ்சைக்கு 7 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் பறிமுதல்

தஞ்சைக்கு 7 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் பறிமுதல்
X

 நெல் கடத்தியதாக, தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு 7 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகள் கொண்ட 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அனுமதியின்றி கடத்தி வரப்படும் வெளிமாவட்ட நெல்மணிகள் தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட வாகனச்சோதனையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 7 லாரிகளில் 120 டன் எடை கொண்ட 2,000 நெல்மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றை, தஞ்சை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் அலுவலத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!