தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு: மனுக்கள் அனுப்பலாம்

பைல் படம்
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசுஅலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கிய தாகவும். ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உ உக்கியதாக இருத்தல் வேண்டும்.
மனுவில் உள்ள பொருள் கீழ்கண்டவைகளாக இருத்தல் கூடாது :
1. தனிநபர் குறை .
2. நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள்.
3. வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம். பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல்.
4. வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல் .
5. அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல்.
சட்டமன்றப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். அவ்வமயம், மனுதாரர் முன்னிலையில், குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுவில் பொருள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும். 20-06-2023-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu