தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் உடல் அடக்கம்

தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் உடல் அடக்கம்
X

தஞ்சாவூரில்  உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 குண்டுகள் முழங்க,  போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ராஜராஜன் என்கிற மோப்பநாயிக்கு, காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்ட காவல்துறையில் ராஜராஜன், சச்சின், சீ சர், டப்சி உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,

கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்ட ராஜராஜன் என்ற மோப்பநாய் இன்று மாலை வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது.

இந்த ராஜராஜன் மோப்பநாய் தஞ்சை மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளது.

இந்நிலையில் மரணமடைந்த ராஜராஜனின் உடல், துப்பறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் மாலையணிவித்து, 21 குண்டுகள் முழங்க நல்டக்கம் செய்யப்பட்டது.

துப்பறியும் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல்துறையினர் மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தினா்.

Tags

Next Story
ai marketing future