சென்னையில் நவ 26,27 ல் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு

சென்னையில் நவ 26,27 ல்  நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு
X
தஞ்சையில் நடைபெற்ற சிபிஎம்எல் மக்கள் விடுதலை டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னையில் நவம்பர் 26,27 தேதிகளில். நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதென தஞ்சையில் நடைபெற்ற சிபிஎம்எல் மக்கள் விடுதலை டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் கட்சியின் துணைத் தலைவர் இரா. அருணாச்சலம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன், ஜனநாயக விவசாயி சங்கத்தின் மாநில தலைவர் ராமர், திருச்சி மாவட்ட செயலாளர் கவிஞர் பாட்டாளி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரக்குமார், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நிர்வாகிகள் பாஸ்கர், ஜோதிவேல், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை செய்யாறு தொழில் பூங்கா சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் நிலம் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கையகப்படுத்தப் படுவதை அரசு கைவிடவும், அருள் மீதான குண்ட சட்டம் ரத்து செய்யவும், போராடிய விவசாயிகள் மீதுதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறவும் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தவிர்த்து எல்ஐசி உள்ளிட்ட மத்திய , மாநில, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் காலங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்தல், போராடி பெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்டுள்ளதை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நவம்பர் 26,27 தேதிகளில் நடைபெறும் சென்னை கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!