வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் கருவிகளுக்கு மானியம்

வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் கருவிகளுக்கு மானியம்
X

பைல் படம்

Subsidy On Agriculture Equipment -தஞ்சை மாவட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.120.96 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Subsidy On Agriculture Equipment -தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023–ம் ஆண்டு வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்து குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்து விவசாயிகளின் நிகரலாபத்தினை உயர்த்திட வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படஉள்ளது.

இதன்படி, அதிகபட்சமாக நெல் நாற்று நடவு செய்யும் சிறிய வகை இயந்திரங்களுக்கு ரூ.1.50 இலட்சம், நெல் நாற்று நடவு செய்யும் பெரிய வகை இயந்திரங்களுக்கு ரூ.5.00 இலட்சம்,வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு ரூ.5.50 இலட்சம், களையெடுக்கும் இயந்திரங்களுக்கு ரூ.0.35 இலட்சம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11.00 இலட்சம், பவர் டில்லர்களுக்கு0.850 இலட்சம் மற்றும் உழுவை இயந்திரங்களுக்கு ரூ.5.00 இலட்சம்.

புல்வெட்டும் இயந்திரம் -0.30 இலட்சம், சுழற் கலப்பை கருவிகளுக்கு ரூ.0.420 இலட்சம், விதை மற்றும் உரமிடும் கருவிகளுக்குரூ.0.241 இலட்சம்,நேரடி நெல் விதைக்கும் கருவிகளுக்கு ரூ.0.040 இலட்சம், தென்னைமட்டை தூளாக்கும் கருவிகளுக்கு ரூ.0.63 இலட்சம், மருந்து தெளிப்பான் ரூ.0.038 இலட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தாழ்த்தப்பட்ட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதமானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின் ஏற்புமானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தற்பொழுது, இத்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை பெற்றிட ஏதுவாக பொதுப்பிரிவினருக்கு நெல் நாற்று நடவு செய்யும் சிறிய வகை இயந்திரம் - 3எண்கள். நெல் நாற்றுநடவு செய்யும் பெரியவகை இயந்திரம் - 1எண், வைக்கோல் கட்டும் கருவி - 2எண்கள், களையெடுக்கும் இயந்திரம் - 5எண்கள், நெல் அறுவடை இயந்திரம்-2 எண்கள், உழுவை இயந்திரம்- 10எண்கள் , பவர் டில்லர் - 15எண்கள், புல்வெட்டும் இயந்திரம் - 1 எண், சுழற்கலப்பை - 5 எண்கள், விதை மற்றும் உரமிடும் இயந்திரம் - 2 எண்கள் நேரடி நெல் விதைக்கும் கருவி– 1 எண்.

தென்னை மட்டை தூளாக்கும் கருவி– 1 எண், மருந்து தெளிப்பான் – 1 எண் ஆக கூடுதலாக49எண்கள் ரூ.102.37 இலட்சம் மானியத்திலும், சிறப்பு கூறு பிரிவினர்களுக்கு நெல் நாற்று நடவு செய்யும் பெரிய வகை இயந்திரம் - 1 எண், வைக்கோல் கட்டும் கருவி; - 1எண்; களையெடுக்கும் இயந்திரம் - 2எண்கள், உழுவை இயந்திரம்- 1 எண், பவர் டில்லர் - 2எண்கள், சுழற்கலப்பை - 2எண்கள், நேரடி நெல் விதைக்கும் கருவி– 1 எண், தென்னை மட்டை தூளாக்கும் கருவி– 1 எண் ஆக கூடுதலாக11எண்கள் ரூ.18.59 இலட்சம் மானியத்திலும் வாங்கிக் கொள்ள தஞ்சை மாவட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.120.96 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட விருப்பமுள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15,கிருஷ்ணாநகர், மனோஜிபட்டிரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும்.

கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் - 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவிசெயற் பொறியாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு தங்களது விண்ணப்பத்தினை அலுவலக நேரங்களில் நேரடியாக சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பயன் பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!