மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்து அடையாள அட்டை வழங்கினார்

தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (07.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் குறுவட்ட அளவில் நடைபெற்று வருகிறது.தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவர்களுக்காக ப்ர்கா வாரியாக (குறு வட்ட அளவில்) 50 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய ஒன்றியங்களில் 11 குரு வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் கீழ்கண்டவாறு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெறகிறது.

திருப்பனந்தாள் ஒன்றியம்:கதிராமங்கலம் 05.07.2022 செவ்வாய் கிழமை இ.சேவை மையம்,கிராம நிர்வாகஅலுவலகம், கதிராமங்கலம்.பந்தநல்லூர் 12.07.2022 செவ்வாய் கிழமை அரசு மேல்நிலைப்பள்ளி, பந்தநல்லூர்.திருப்பனந்தாள் 19.07.2022 செவ்வாய் கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருப்பனந்தாள். தஞ்சாவூர் ஒன்றியம், ராமாபுரம் 07.07.2022 வியாழன் கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ,மத்தூர் கிழக்கு வல்லம் 14.07.2022 வியாழன் கிழமை பேரூராட்சி அலுவலக சமுதாய கூடம், வல்லம்.நாஞ்சி கோட்டை 21.07.2022 வியாழன் கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,நாஞ்சிகோட்டை

கள்ளபெரம்பூர் 28.07.2022 வியாழன் கிழமை கிராம சேவை மையம் கள்ளபெரம்பூர்.தஞ்சாவூர் 29.07.2022 வெள்ளி கிழமை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். தஞ்சாவூர்.மதுக்கூர் ஒன்றியம்,பெரியகோட்டை 08.07.2022 வெள்ளி கிழமை அரசு மேல்நிலைப் பள்ளி ,ஆலத்தூர்.மதுக்கூர் 15.07.2022 வெள்ளி கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மதுக்கூர்திருவோணம் ஒன்றியம்,சில்லத்தூர் 22.07.2022 வெள்ளி கிழமை வெட்டிகாடு ,அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவளிப்பட்டி 26.07.2022 செவ்வாய் கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவோணம்.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இன்று வல்லம் பேரூராட்சி அலுவலக சமுதாய கூடம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 250க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று 75 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது, மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID card) 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது விரைவில் இதற்கும் தீர்வு காணப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய ஒன்றியங்கில் 11 குரு வட்டங்களுக்குட்பட்;ட அனைத்து கிராமங்களைச்சேர்ந்த இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவனங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்றவேண்டும்

திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய ஒன்றியங்கில் 11 இடங்களில் நடைபெறும் முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இம்முகாமில் பேரூராட்சித் தலைவர் திருமதி.செல்வராணி கல்யாணசுந்தரம், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. நா.சாமிநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) திரு. தவவளவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!