சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்

சாலையோர வியாபாரிகள்  கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்
X

சாலையோர வியாபாரிகள் பைல் படம்

Street Hawkers - தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை , அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது

Street Hawkers -தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் திட்டம் மற்றும் விதிகள் 2015-ன் படி "தமிழ்நாட்டில் தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட, நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் எவ்வித சிரமும் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

இக்கணக்கெடுப்பின் போது சாலையோர வியாபாரிகளை அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கே வந்து கைபேசி செயலி(ஆடிbடைந ஹயீயீ) மூலம் இடக்குறியீட்டுடன், சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்களுடன் கூடிய (ழுநடி வயபபநன றiவா க்ஷiடி-அநவசiஉ னநவயடைள) விபரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அமர்த்தப்படும் நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணி முடிவுற்ற பின் தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு திட்ட விதிகளின்படி, அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்தவற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.இந்த திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் பெற தகுதியானவர்கள் விவரம் வருமாறு:

1. சாலையோர வியாபாரம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நபர்கள்.

2. பதிநான்கு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

3. தனி நபர் அல்லது அவரது குடும்பத்தார் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் சாலையோரங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், நிரந்தரமாக கடைகள் வைத்திருப்பவர்கள், பல இடங்களுக்கு வாகனமின்றி மற்றும் வாகனங்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள், வாராந்திர சந்தை, மாத சந்தை, இரவு சந்தை மற்றும் விழாக்கால சந்தைகளில் வியாபாரம் செய்பவர்கள், என சாலையோர வியாபாரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகளால், வியாபாரம் செய்யப்படும் கடைகளின் அளவு, நேரம் மற்றும் முறைகளின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் வியாபார கட்டணத்தை செலுத்திட வேண்டும்.மேலும், சாலையோர வியாபாரிகளால், அவரவர் வியாபாரம் செய்யும் பகுதிகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களால் உருவாக்கப்படும் கழிவுகளை, உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்படி முறையாக அப்புறப்படுத்திட வேண்டும். இதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் (vending zones) மட்டுமே வியாபாரம் செய்யப்பட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் 5 வருட காலம் அல்லது மறு கணக்கெடுப்பு காலம் வரை செல்லத்தக்கதாகும்.

தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், கணக்கெடுப்பின் போது முழு ஒத்துழைப்பினை வழங்கிடவும், திட்டத்தின் வழிகாட்டுதலின்படி சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை பெற்று பயன்பெறலாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியத் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!