வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் மரக்கன்றுகள் நடும் பணி

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ்  தஞ்சாவூரில் மரக்கன்றுகள் நடும் பணி
X
இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் செய்கின்றனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் , மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்குஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (29.7.2022) மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம்,வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் மாவட்டநிர்வாகம் , மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளுக்கும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர்.

முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் 10 உறுப்பினர் அடையாள அட்டை, மகளிர் திட்டம் சார்பில் ஈஸ்வரி மகளிர் சுய உதவிக் குழு ரூ. 400000 கூட்டுறவு வங்கிக் கடன் காசோலையையும் , மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வல்லம் பேரூராட்சித் தலைவர் செல்வராணிகல்யாணசுந்தரம்,ஒன்றிய குழு துணைபெருந்தலைவர் அருளானந்தசாமி, கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் ராதிகாமைக்கேல், பேரூராட்சிஉறுப்பினர்கள் ஆரோக்கியசாமி, அன்பழகன், ரேவதி, துணைத்தலைவர் மகாலட்சுமிவெங்கடேசன் , உதவி இயக்குனர் பேரூராட்சிகள் கனகராஜ்,வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, இன்டாக் கௌரவசெயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture