விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு
X

காவல்நிலைய விசாரணையின்போது உயிரிழந்தவர்

தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்தது குறித்து டிஐஜி, எஸ்பி விசாரணை

தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கில் சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த சூர்யா, சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன் ஆகிய மூன்று பேரையும்,விசாரணைக்காக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் அழைத்து வந்து தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, சீர்காழியை சேர்ந்த சத்யவாணன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்து வந்தவர் காவல்நிலையத்தில் உயிரிழந்த நிலையில், விசாரணையின் போது சத்தியவாணன் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறியதாகவும், உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!