தசைநார் சிதைவு நோயால் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் பெற்றோர்

தசைநார் சிதைவு நோயால் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் பெற்றோர்
X

தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகரில் நடைபெற்ற சிறுமி பாரதியின் சிகிச்சைக்காக மக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சி 

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 16 கோடி மதிப்பிலான, ஊசி செலுத்தினால் நோயை குணப்படுத்த முடியும் என கூறியுள்ளனர்

தஞ்சாவூரில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 22 மாத குழந்தையின், பெற்றோர்கள் கண்ணீருடன் நிதி திரட்டி போராடி வருகின்றனர்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (32). ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி எழிலரசி, (32) அதே வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 22 மாத பெண் குழந்தை பாரதி, தானாக எழுந்து நிற்க முடியாமல் முதுகு தண்டு வட தசை நார் சிதைவு நோய் இருப்பது கடந்த ஆக.9-ம் தேதி கண்டறியப்பட்டது.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 16 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும் என கூறியுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகரில் சிறுமி பாரதியின் சிகிச்சைக்காக மக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் பங்கேற்று , தனது நிதியை வழங்கி துவக்கி வைத்தார், தொடர்ந்து விளார் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பெண்கள் தங்களின் ஒருநாள் ஊதியமான ரூ. 35 ஆயிரமும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரோட்டர்கள், வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் நிதியுதவி அளித்தனர். இதில் மட்டும் ரூ. 5 லட்சம் நிதி கிடைத்தது.

இந்த நிழ்வில் குழந்தை பாரதியின் தாய் எழிலரசி பேசுகையில்; பலரும் எங்கள் குழந்தையின் உடல் நல சிகிச்சைக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. எனது மகளுக்கு வந்துள்ள நோய் 10 ஆயிரம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு வரும் நோய் என டாக்டர்கள் கூறுகிறார்கள். பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவமனையில் மரபணு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், இது போன்ற நோய் ஆரம்பத்திலேயே தெரிந்து நான்கைந்து லட்சம் ரூபாய் செலவில் குணப்படுத்தி விடலாம்.

ஏற்கெனவே, மித்ரா என்ற குழந்தைக்கு குமாரபாளையத்தில் உள்ள வங்கி மூலம் கணக்கு தொடங்கி அதன் மூலம் நிதியை திரட்டினர். அந்த அடிப்படையில் தான் நாங்களும் அதே வங்கியை அணுகி நிதியை திரட்ட கணக்கு தொடங்கியுள்ளோம். செப்டம்பர் மாதம் இறுதிக்குள்ளாக ரூ.16 கோடி தேவை என்கிற நிலையில், தற்போது ரூ.1.75 கோடி தான் கிடைத்துள்ளது. அரசும், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களுக்கும் கருணை காட்டுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!