வீட்டுக்கு ஒரு விருட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

வீட்டுக்கு ஒரு விருட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
X

கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் ஒரு லட்சமாவது மரக்கன்றை நடவு செய்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம். கடந்த ஆண்டில் உலக புவி தினமான 22.04.2022 ல் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகத்தில் ஒரு இலட்சமாவது மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம்- ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம். கடந்த ஆண்டு உலக புவி தினமான 22.04.2022 அன்று குந்தவை நாச்சியார் அரசுமகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்று நடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை மற்றும் வன பரப்பினை அதிகப்படுத்துவது, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பதுகுறித்தவிழிப்புணர்வுஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதுநாள் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோயில் வளாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒருலட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25000 மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25000 மரக்கன்றுகளும்,கல்லூரிகள் சார்பில் 15000 மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15000 மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10000 மரக்கன்றுகளும், இதர அரசு துறைகள் சார்பில் 10000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திட்டத்தில் நடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும், அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இதனில் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசை வனம், அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பறவைகள் வனம், மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் ஆழி வனம் சிறப்புக்குரியதாகும். தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் - ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் ஒரு லட்சமாவது மரகன்றினை நட்டு வைத்து 31.03.2023 தேதிக்குள்ளாக இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகளும் உயிருடன் வளர்ந்து வருவது உறுதி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் நட்டுவைத்த முதல் மரக்கன்று வளர்ச்சியினை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் மரு.ராதிகாமைக்கேல், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார், இந்திய மருத்துவ சங்க மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் சிங்காரவேலு, தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர். பிரகதீஷ், இன்டாக் ஒருங்கிணைப்பாளர், சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் இராமமனோகர், உறுப்பினர்கள் செல்வராணி, கவிஞர் ராமதாஸ், குருநாதன், முத்தமிழ்செல்வி , கல்பனா, ஜோசப் தன்னார்வலர்கள் அப்துல் லத்தீப், ரவிக்குமார், முகமதுவாஹித், குரு,கார்த்தி, பிரபாகரன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!