/* */

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு

விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்டவரின் பெயருக்கு விருது மாற்றம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு
X

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெயர் மாற்றம் செய்து மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்ததற்கு விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்ட ஒருவரின் பெயரில் விருது வழங்குவது என்பது பாராட்டுக்குரியது இதனை நான் வரவேற்கிறேன் என தஞ்சையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார் .

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக இருந்தது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தன்னெழுச்சியாக பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, என் குடிநீருக்காக போராடுகிறேன். குடிதண்ணீருக்காக போராடுபவர்கள் மீது வழக்குப் போடுவது என்பது, தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர்களாக நான் கருதுகிறேன். என்றும் தெரிவித்தார். எமர்ஜென்சி காலத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரியும்.. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெயர் மாற்றம் செய்து, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என, பிரதமர் அறிவித்ததற்கு விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்ட, ஒருவரின் பெயரில் விருது வழங்குவது என்பது பாராட்டுக்குரியது. இதனை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

Updated On: 6 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!