எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்

கல்வித் தகுதி தேவையில்லை வயது 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமான வரம்பில்லை

எஸ்.சி - எஸ்.டி தொழில் முனைவோருக்கெனச் செயல்படுத்தும் தனிச்சிறப்புத் திட்டம் – அண்ணல் அம்பேத்கார் வெல்லும் தொழில் முனைவோர் – பிசினஸ் சாம்பியன்ஸ் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SCHEME – AABCS) திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சமூக நீதியிலும் சமத்துவத்திலும் பற்றுறுதி கொண்ட தமிழ்நாடு அரசு எஸ்.சி ரூ எஸ்.டி தொழில் முனைவோருக்கெனச் செயல்படுத்தும் தனிச்சிறப்புத் திட்டம் அண்ணல் அம்பேத்கார் வெல்லும் தொழில் முனைவோர் – பிசினஸ் சாம்பியன்ஸ்எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு தனிநபர், அப்பிரிவினருக்கு உரிமையான தனியுரிமை அலகுகள், பங்குதாரர் கூட்டாண்மைகள், ஒரு நபர் கம்பனி, பிரைவேட் லிமிடெட் கம்பனிகள் பயன் பெறலாம்.

புதிய தொழில் திட்டங்கள் மட்டுமன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற அலகுகளின் விரிவாக்க, பல்துறையாக்க, நவீனமாக்க மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ளலாம்.

கல்வித் தகுதி தேவையில்லை. வயது 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான வரம்பில்லை திட்டத்தொகையில் 65% வங்கிக் கடன் 35% அரசு மானியம் வங்கிக் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியம் நேரடி வேளாண்மை தவிர்த்து அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைசார் தொழில் திட்டங்கள் உணவுப் பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், தென்னை நார்ப் பொருட்கள் உற்பத்தி, ஹாலோபிளாக், சாலிட் பிளாக், பல்பொருள் அங்காடி, வாணிகப் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, ஐ.டி. ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், BPO ஆட்டோ மொபைல் சர்வீசிங், அழகு நிலையம், உடற் பயிற்சிக் கூடம், கழிவு மேலாண்மை., பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து, JCB, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்டவை

இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/aabcs ஆகும்.. இத்திட்டம் குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மையம், உழவர் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரடியாகவோ, 04362-255318,257345 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ அணுகலாம் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா