/* */

தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

தஞ்சையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த்; தலைமையில் அனைத்து அரசுதுறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்துஅலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம். காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், மக்களை தேடி மருத்துவம்,

இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடுகள் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறம் போக்கு, (பொதுப்பணித்துறை) போன்றஇடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல், இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் இக்கூட்டத்தில ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி )எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jun 2023 5:45 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...