சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்

சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்கள் உள்ள நிலையில் கும்பகோணம் சுகாதார மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நேற்று பல்வேறு புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள் .

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், மெலட்டூர் ஊராட்சியில் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடமும், கபிஸ்தலம் ஊராட்சியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடமும், திருவைகாவூர் ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறந்து வைத்து கர்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கப்பட்டது.

உமையாள்புரம் ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடமும், கூகூர் ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதாரநிலைய புதியகட்டிடம் என மொத்தம் ரூபாய் 163 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 400 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் கூடம் மற்றும் வார்டு அமைப்பதற்கும்,ரூபாய் 75 இலட்சம் மதிப்பீட்டில் அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கும், ரூபாய் 120 இலட்சம் மதிப்பீட்டில் திப்பிராஜபுரம் புதிய ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் கட்டுவதற்கும்,ரூபாய் 22.75 இலட்சம் மதிப்பீட்டில் பட்டீஸ்வரம் செவிலியர் குடியிருப்புகட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் 617.75 லட்சம் புதிய சுகாதாரக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்களும் உள்ளன. மேலும் கும்பகோணம் சுகாதார மாவட்டங்களாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

முன்னதாக பாபநாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டு. பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் தொடர்ந்து கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்த அழுத்த பரிசோதனை சிறப்பு முகாமினை துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), க. அன்பழகன் (கும்பகோணம்), முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்), நிவேதாமுருகன் (பூம்புகார்), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவபணிகள் இணை இயக்குனர் மரு. திலகம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா,செயற்பொறியாளர் (பொ.ப.து) பொறி.நாகவேலு, கும்பகோணம் மாநகராட்சிமேயர் க.சரவணன், துணைமேயர்கள் சு.ப.தமிழழகன் (கும்பகோணம்), மரு. அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.பா.கலைவாணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுதுணைத் தலைவர் சு.க.முத்துசெல்வம், ஒன்றிய குழு தலைவர்கள் சுபாதிருநாவுக்கரசு (திருவிடைமருதூர்), சுமதிகண்ணதாசன் (பாபநாசம்), கே.வி.கலைச்செல்வன் (அம்மாபேட்டை) மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.Tags

Read MoreRead Less
Next Story