கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

 தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளன மாநில நிர்வாகக்குழு கூட்டம்

முதியோர்களுக்கு ஓய்வூதியம் 6000 வழங்க வேண்டும் என ஒன்றிய, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளன மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் கீழராஜவீதி மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் ஜி.மணிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் எஸ. பி.ராதா நடைபெற்ற பணிகள் குறித்தும், ஒன்றிய மாநில அரசுகள் அழிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் என் . எஸ்.பெருமாள், நிர்வாகிகள் கே.தஙகராசு, ணண்கே.ராஜாராம், கோ.சந்திரன், எம் .ராம்குமார், கே.கே.தாமோதரன், ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நாளுக்கு நாள் நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு விதித்துள்ள ஜி எஸ் டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தயாராகும் துணிகளுக்கு வழங்கும் ரிபேட் மானியத்தை மாற்றி அமைத்து, சேலையின் உற்பத்தி விலைக்கு 20 சதவீதம் ரிபேட் -ஐ தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும், முதியோர்களுக்கு ஓய்வூதியம் 6000 ரூபாய் வழங்க வேண்டும் என ஒன்றிய, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கை, தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து வருகின்ற நவம்பர் மாதம் 26,27, 28 தேதிகளில் நடைபெறும் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story