தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் போட்டித்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் (SSC) இளநிலை செயலக உதவியாளர்இ பிரிவு எழுத்தர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4500 காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை படிப்பு தரம் (CHSL) தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்விற்கான வயது வரம்பு 18 வயது முதல் 27 வயது வரை ஆகும். இத்தேர்விற்கு 04.01.2023-ஆம் தேதிக்குள் https:// ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள காவலர்(GD Constable) தேர்விற்கும் மற்றும் மேல்நிலை படிப்பு தரம் (CHSL) தேர்விற்கும் சேர்த்து, இலவச பயிற்சி வகுப்பு வரும் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு இவ்வலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார்செய்யும் விதம், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-237037. தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu