சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
பைல் படம்
சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கடுவை நீட்டித்து தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் ஆகியோர் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பப்பட்டுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்டு காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குருவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் பாழாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடனாளியாகவும் ஆகி உள்ளனர்.
இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு பண்டிகை விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களினால் விவசாயிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடிகள் இறங்கி உள்ள நிலையில் நவம்பர் 15 பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்டம் நிர்வாகம் உரிய கவனம் ஏற்று நவம்பர் 15 தேதியிலிருந்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து தர வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசையும், கேட்டுக்கொள்கிறோம் என்று அனுப்பப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu