தஞ்சாவூரில் செம்மொழி நூலகத்தை திறந்து வைத்த திமுக எம்பி

தஞ்சாவூரில் செம்மொழி நூலகத்தை திறந்து வைத்த திமுக எம்பி
X

செம்மொழி நூலகத்தினை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் , மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தார்.

செம்மொழி நூலகத்தினை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் , மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று (10.12.2022) திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும். தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நலதுறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூபாய் 1 இலட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த1 இலட்சம் ரூபாயில் ரூ.50,000-செலவில் புத்தகங்களையும் ரூ.50,000-செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ருபாய் 18 இலட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் ,உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள்,தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள்,மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. என்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றஉறுப்பினர் எஸ் .எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சிமேயர் சண். ராமநாதன் , மாவட்டஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் க.ரேணுகாதேவி, விடுதிகாப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இலவசமாக நிலத்தடியில் எந்த அளவிற்கு ஊற்று தோண்டுகிறமோ அந்த அளவிற்கு ஊற்றில் நீர் அதிகமாக காணப்படும். அது போல எந்த அளவிற்கு நாம் கல்வி கற்கின்றமோ நம்முடைய அறிவை அதிகரித்து கொள்ள முடியும். நாம் எந்த அளவிற்கு நூல்களை விரும்பி கற்றுக்கொள்கிறமோ அந்த அளவிற்கு அறிவுத்திறன் பெருகும். நமது அறிவுத்திறனை அளிக்கக்கூடிய நூல்கள் இருக்கும் இடத்தை தான் நூலகம் என்று கூறுகிறோம்.

ஒரு ஊருக்கு மிகவும் முக்கியமானது நூலகம். ஏழை மாணவர்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு வெளியில் பணம் கொடுத்து புத்தகங்களை வாங்கி படிக்கும் அளவிற்கு வசதி பெரும்பாலும் இப்போதைய காலத்தில் இல்லை. இந்த நிலையை அறிந்தே அனைத்து ஊர் கிராமப்புறத்திலும் நூலகம் அமைக்கப்பட்டது. நூலகத்தில் நாம் உறுப்பினராக இருந்தால் நமக்கு எந்த நேரத்தில் எது மாதிரியான புத்தகம் வேண்டுமோ அதை நாம் நூலகம் சென்று எடுத்துக் கொள்ளலாம்.

முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்களின் கல்வி திறன் மிகவும் குறைவுத்தான். அரண்மனைகளிலும், கோவில்களிலும் படிக்கும் நோக்கமில்லாமல் பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அது மாற்றம் அடைந்து நூல்கள் படிப்பதற்கே என்று உருப்பெற்றன.நூல்களை எடுத்து படிக்க நூலகம் மிகவும் பயன்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!