போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்பக்கோரி தர்ணா

போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்பக்கோரி தர்ணா
X

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலந் தழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலந் தழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதியர் அகவலைப்படி உயர்வு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.அரசு மேல்முறையீடு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும், அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்கள், மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டவர் களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வார ஓய்வும், அவசர தேவைகளுக்கு விடுமுறையும் கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லவும் முடியாமல் மிக நேர பணி பார்க்க வற்புறுத்தப்படுகின்றனர்.இதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர்.

இந்நிலைகளை போக்கிட காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இது நாள் வரை வழங்கப்படவில்லை. இது குறித்த வழக்கில் 2022 நவம்பருக்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும். இது குறித்த தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டும் கூட, உத்தரவை அமுல்படுத்தாமல், தமிழ்நாடு அரசும், போக்குவரத்து ஓய்வூதிய நம்பகமும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உடனடியாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அரசு மேல் முறையீடு சென்றதை திரும்ப பெற வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். 14 வது ஊதிய ஒப்பந்த 7 மாதகால நிலுவைதொகையை பேச்சு வார்த்தை முடிவின் படி வழங்க வேண்டும். கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும், காத்திருக்கும் வாரிசுதாரர்களுக்கு வாரிசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் பணி செய்த அனைவருக்கும் கொரோனா கால சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற திமுக தேர்தல் கால வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டாகியும் நிறைவேற்றப்படாத நிலையே நீடிக்கிறது. இதை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏஐடியூசி மத்திய சங்கத் தலைவர் என்.சேகர் தலைமை வகித்தார் .ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர். ஆர். தில்லைவனம் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் மல்லி. ஜி. தியாகராஜன், பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன்,துணைத்தலைவர்கள் அ.சுப்பிரமணியன், பொறியாளர் ஓய்வு எஸ்.முருகையன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் தி.கஸ்தூரி, கே.சுந்தரபாண்டியன், டி.தங்கராசு, அ.இருதயராஜ், வி.கலியமூர்த்தி, எம்.தமிழ் மன்னன், ஜி.சண்முகம்,டி.சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் மத்திய சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!