தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்:மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில்  வளர்ச்சித் திட்டப் பணிகள்:மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்:மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி, சானூரப்பட்டி ஆகிய ஊராட்சியில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து புதுப்பட்டி ஊராட்சியில் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி மற்றும் உறிஞ்சிகுழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். சானூரப்பட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகஉள்ளதா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் தஞ்சாவூர் ஒன்றியம் மேலவேளி கிராமம் முதலைமுத்துவாரி வடிகால் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் நீர்வளத்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கண்டார். அப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது நீர்வளத்துறைசெயற்பொறியாளர்.இரா. பாண்டி,பூதலூர் வட்டாட்சியர் பிரேமா, வட்டாரவளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!