/* */

பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
X

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சம்மேளனத்தினர் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர்

பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும், போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்குமல்யுத்த வீராங்கனைகளுக்குஆதரவளித்தும் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

சர்வதேச போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் உள்ளிட்டு பல்வேறு போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் உள்ளிட்டு பல்வேறு பதக்கங்கள் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்சி மாலி,கீதாபோகத், வினோத் போகத் உள்ளிட்ட இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜ் பூசன் சரண்சிங் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி தலைநகர் ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை டெல்லி காவல்துறை கடுமையாக தாக்கி போராட்டத்தை கைவிட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செய்திகள் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்ஜ் பூசன் சரண்சிங் கை கைது செய்ய வலியுறுத்தியும், வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று( 16. 5. 2023 ) தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கே.காரல்மார்க்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்பபாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார்.

ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தனசீலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் எஸ்.ராஜலெட்சுமி, மீனா,சந்திரகலா, பானுமதி,சிலம்பரசி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிரகாஷ், சந்தோஷ், அருள்மொழி ஈசுவரன், கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், துணை செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 16 May 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’