நெல் சேமிப்புகிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூரை கட்டுமானப்பணி: ஆட்சியர் ஆய்வு

நெல் சேமிப்புகிடங்கில் கான்கிரீட் தளத்துடன்  கூரை கட்டுமானப்பணி: ஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நெல் சேமிப்பு கிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை கட்டப்பட்டு வருவதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (09.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை பாதுகாக்க ரூ.35.205 கோடியில் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்படுகிறது

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நெல் சேமிப்பு கிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை கட்டப்பட்டு வருவதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (09.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு திறந்த வெளியில் நெல் இருக்கக் கூடாது என்பதற்காக 3 லட்சம் டன்கள் சேமிக்கும் வகையில் 20 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி அக்டோபர் 31-ந் தேதிக்குள் நிறைவடையும். தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக குறுவை பயிர் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் டன் சேமிப்பு எனவே 3 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 20 கிடங்குகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், கூடுதலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம், கூட்டுறவுத் துறைக்கட்டிடங்கள் என 7.94 லட்சம் டன்கள் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் 11 லட்சம் டன் நெல்லை பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியும்.

இது குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நெல் சேமிப்புக் கிடங்கில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.மழை,வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது. இதைத் தவிர்க்க திறந்தவெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அதன் பொருட்டு நெல்லை பாதுகாக்க கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை கட்ட தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் அருகே பிள்ளையார்ப்பட்டி மற்றும் சென்னம்பட்டியில் 50,000 மெ.டன் மற்றும் 2,500 மெ.டன், மேலும், பட்டுக்கோட்டை தாலுகா, திட்டக்குடியில் 6,000 மெ.டன் என மொத்தமாக 58,500 மெ.டன் கொள்ளளவில் கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

அதனைஆய்வுசெய்து, இப்பணிகளை துரிதப்படுத்தி அடுத்த கொள்முதல் காலங்களில் மழை, வெயிலால் பாதிக்காத வகையில் நெல்லை பாதுகாக்கும் வகையில் தரமாகப் பணிகளை செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர், முதுநிலை மண்டலமேலாளர் நா. உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!