/* */

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
X

பைல் படம்

தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டு தலின்படி”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள் /நகராட்சிகள்/பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, 21.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை மாநகராட்சியில் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், ராஜ் மஹால் மற்றும் கும்பகோணம் காவேரி சந்து, மேட்டுத்தெரு, சி.ஜே.வி.மஹாலிலும், நகராட்சியில் பட்டுக்கோட்டை சௌகண்டி தெரு, ஜி.என்.பி.திருமண மண்டபம் மற்றும் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்திலும், பேரூராட்சியில் 1.மதுக்கூர் எம்.எஸ்.ஏ. திருமண மண்டபம், 2.பாபநாசம் கபிஸ்தலம்ரோடு, சிந்தாமணி முத்தையா மஹால், 3.சுவாமிமலை திருமஞ்சன வீதி,

ஸ்ரீபாலம்பாள் திருமண மண்டபம், 4.திருவையாறு தியாகராஜா திருமண மண்டபம்,5.வேப்பத்தூர் சமுதாய கூடம், அம்மன் கோயில் தெருவிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சிநிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைதுறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,உள்மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைதுறை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை,

ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (மாவட்ட தொழிற் மையம்),தொழிலாளர் நலவாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைக ளிடமிருந்து பெற்றுக்கொள்ள ஓர் அரியவாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

மேலும், பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும்முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Dec 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  3. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  4. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  5. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  8. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  9. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  10. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!