மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: தஞ்சரவூர் மாவட்டத்தில் நாளை நடைபெறுகிறது

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம்: தஞ்சரவூர் மாவட்டத்தில் நாளை நடைபெறுகிறது
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி, மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் புதிதாக திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள்/ நகராட்சிகள்/பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 20.12.2023 அன்று காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை மாநகராட்சியில் தஞ்சாவூர் மிஷின் சர்ச் ரோடு, செயின்ட் பீட்டர் ஸ்பேரீஸ் ஹால் மற்றும் கும்பகோணம், யாகசாலை தெரு, பெரியநாயகி திருமண மண்டபத்திலும் ,நகராட்சியில் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்திலும், பேரூராட்சியில் அம்மாபேட்டை பஞ்சாயத்து யூனியன் திருமண மண்டபம் மற்றும் திருபுவனம் ஜே.கே.வி.எஸ். திருமண மண்டபத்திலும், மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியான நாஞ்சிக்கோட்டை கிராம சேவைமையம் மற்றும் வலையப்பேட்டை மாங்குடி சமுதாய கூடத்திலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை, உள்மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (மாவட்டதொழிற்மையம்), தொழிலாளர் நலவாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,பொது மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . பொது மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா