தஞ்சையில் கைலாச வாகனத்தில் சந்திரசேகரர் காட்சி

தஞ்சையில் கைலாச வாகனத்தில் சந்திரசேகரர் காட்சி
X
சித்திரை திருவிழாவின் 14ஆம் நாளான இன்று கைலாச வாகனத்தில் சந்திரசேகரர் காட்சியளித்தார்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கொரனோ பரவல் காரணமாக தினமும் சுவாமி வீதியுலா கோயில் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி காட்சியளித்து வருகிறார். 14ஆம் நாளான இன்று அம்பாளுடன் கைலாச வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!