திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை அளிப்பு

திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை அளிப்பு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 10 பேருக்கு ரூ.15,000 -க்கான காசோலை வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 10 பேருக்கு ரூ.15,000 -க்கான காசோலை வழங்கப்பட்டது

திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை ஒப்பளிப்பு அரசாணை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகை ரூ.10.000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 10 பேருக்கு ரூ.15,000/-க்கான காசோலையையும் முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட சான்றிதழ் மற்றும் அரசாணையையும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகைப் பெற்றுவரும் 12 பேருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை ஒப்பளிப்பு அரசாணையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வடஅமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் தஞ்சாவூர் திருக்குறன் முற்றோதல் பயிற்றகம் ஆகியவை இணைந்து பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்கமாக முதலில் 27 பள்ளிகளுக்கு நூல்களை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற 6 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஐ.சபீர்பானு. தஞ்சாவூர் திருக்குறள் முற்றோதல் மண்டலப் பயிற்சியாளர் திருக்குறள் தூயர் அ.கோபிசிங் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!