மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

பைல் படம்
"மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (Single Use Plastic) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பைவிருதுகள்” வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களானபிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல் படுத்தும் மாநிலத்தின் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாகரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாக திகழும் பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் httpS://thanjavur.nic.in-இல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: 1) விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் /நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப் பட்டிருக்கவேண்டும்.
2) கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி :01.05.2024.என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu