தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தலைமையில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாபெரும் உறுதிமொழியினை மாணவ மாணவிகளுடன் ஏற்றனர்
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் (11.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில்; குந்தவை நாச்சியார் அரசுமகளிர் கல்லூரி,மருதுபாண்டியர் கலைக் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம்,அடைக்கல மாதா கலைக்கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, அபிஅபி கலைக் கல்லூரி, பயோகேர் பயிற்சி நிறுவனம் ஆகிய கல்வி நிலையங்களைச் சார்ந்த 500 மாணவ மாணவிகள் தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், அண்ணா கலையரங்கம் வரை பேரணியாகச் சென்றனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாபெரும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிசென்னைகலைவாணர் அரங்கத்தில் காணொலியில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், புதியபேருந்துநிலையம் பின்புறமுள்ள புதிய மாநாட்டு மையக்கட்டிடத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தலைமையில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாபெரும் உறுதிமொழியினை மாணவ மாணவிகளுடன் ஏற்றார்.
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியானது:போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களைமீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத்தருவேன்.போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு.பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் மாணவ, மாணவிகளுடன் ஏற்றார்.
இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுக்கு போதைப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வு அடைவதன் மூலம் போதை ஒழிப்பு மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு) டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், மாவட்டவருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் த. சரவணக்குமார், மண்டலகல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் நா. தனராஜன்,வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் (பொ),தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu