தூய்மை பணியாளர்கள் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் முறைய ரத்து செய்யக் கோரிக்கை

தூய்மை பணியாளர்கள் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் முறைய ரத்து செய்யக் கோரிக்கை
X

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ஏஐடியுசி சம்மேளனத்தினர்

தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

தூய்மை பணியாளர்கள் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணை களை ரத்து செய்யவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள் முன்பு கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் தஞ்சை மாவட்ட ஏஐடியூசி சார்பில் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், தஞ்சாவூர் மாநகராட்சி தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் சுய உதவிக்குழு மூலம் சம்பளம் வழங்குவதை தவிர்த்து நேரடியாக வழங்க வேண்டும். முழு நேர பணியாளர்களை பகுதி நேர பணியாளராக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணிகளுக்குரிய சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணை எண் 152 ,10, 139 ஐரத்து செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 21,000 ம் உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர், இறந்தவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தில் அமல்படுத்திட வேண்டும் என ஆணையரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தஞ்சை மாவட்ட ஏஐடியூசி பொதுச் செயலாளர் ஆர். தில்லைவனம் தலைமையில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன் நிர்வாகிகள் எஸ் .சுதா கே. கல்யாணி, எம்.பாலமுருகன், தா.அயூப்கான் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!