/* */

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து மாநாடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு

HIGHLIGHTS

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து  மாநாடு
X

ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து "விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு"

ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமைதூக்கும் பணிகள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலைய வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டு பல இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சன் ரைஸ் லேபர் கான்ட்ராக்டர் என்ற ஒப்பந்தக்காரர் நாகை மாவட்டம் முழுதும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலை நவீன அரிசி ஆலையில் இயக்குனர்,உதவி இயக்குனர்,உதவுபவர்,மின் இணைப்பாளர் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. சமீபத்தில் தஞ்சைக்கு வருகை தந்த உணவு அமைச்சர் அர. சக்கரபாணி அரசு நவீன அரிசி ஆலையில் தனியாரை பயன்படுத்தி அரைவை செய்து பாக்கெட்டுகளில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதேபோல திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் அனைத்து பொறுப்புகளையும் தனியாருக்கு விட்டு லாரி மூலம் ஏற்றி செல்வது, சேமிப்பது, பாதுகாப்பது, தார்ப்பாய் போடுவது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது என அனைத்து பொறுப்புகளும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகளை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைத்து, ஒப்பந்ததாரர் களை பாதுகாக்க சொல்வது தற்கொலைக்கு சமமானதாகும். விவசாயிகளுக்கும் அன்றாடம் நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வரும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்துவிடும். நேரடியாக சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர்களை வெளியேற்றுவது அல்லது தற்போது பெறுகின்ற கூலியை விட குறைந்த கூலியில் ஒப்பந்தக்காரர்களுக்கு அடிமைகளாக பணிபுரிய செய்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல.

இந்த முறையை தொழிலாளர்கள் ஏற்காமல் ஒப்பந்தக்காரர்களை சம்பந்தப்பட்ட இடங்களில் நுழையவிடாமல் தடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமான மிகச் சிறப்பான சேவையை செய்து வருகிறது.ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் அரசு நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு நெல் கொள்முதலிலும் பொது விநியோக முறை செயல்படுத்துவதிலும் இந்தியாவிலேயே முன்மாதிரி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவது வருந்ததக்கது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த நிறுவனத்தை ஒரு கனவு நிறுவனமாக மக்களுக்கு மிகப்பெரிய சேவையாற்றுகின்ற நிறுவனமாக செயல்படுத்தி வந்தார். மேலும் மேலும் மக்களுக்கான சேவையை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக தனிகவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ண ஓட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இதனை கைவிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருகிற ஜூலை 24ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர்(நாகை பைபாஸ்) ஏவிஎஸ் திருமண மகாலில் விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து தொழிற்சங்க மாநில தலைவர்கள் விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்டார் பங்கேற்கின்றனர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள், சேமிப்பு கிடங்குகள், நவீன அரிசி ஆலைகளில் பணியாற்றுகின்ற அனைத்து தொழிலாளர்களும், பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமென அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்வதாக அதில் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...