ஏஐடியூசி 104 ஆவது அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு

ஏஐடியூசி 104 ஆவது அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு
X

ஏஐடியூசி 104 ஆவது அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும் 1920 அக் 31ஆம் தேதி ஏஐடியூசி தொழிற் சங்கம் உருவாக்கப்பட்டது

ஏஐடியூசி 104 ஆவது அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஏஐடியூசி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அரசியல் கட்சிகள் துவங்குவதற்கு முன்பாக துவக்கப்பட்ட தொழிற்சங்க அமைப்பாகும். கப்பற்படை எழுச்சி, பம்பாய் பஞ்சாலை தொழிலாளர் போராட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.

அரசியல் கட்சி தலைவர்களை நாட்டிற்கு உருவாக்கி தந்தது ஏஐடியூசி. இச் சங்கம் தொடங்கப்பட்ட 104 ஆவது அமைப்பு நான் நிகழ்ச்சி நாடு முழுவதும் கொடியேற்றி, உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக ஏஐடியூசி 104வது அமைப்பு நாள் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மையங்களில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் கீழராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். ஏ ஐ டி சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அமைப்பு நாள் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

நிகழ்வில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டம், தொழிற்சங்க சட்டங்கள் திரும்ப பெற வேண்டும், உடல் உழைப்பு ,கட்டுமான நல வாரிய நிதி உதவிகள் அதிகப்படுத்த வேண்டும்.

ஓய்வூதியம் 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யும் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ,திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், அரசு மற்றும் பொதுத் துறை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த, தனியார் முறைகளில் நியமனம் செய்வது கைவிடப்பட வேண்டும், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

104வது அமைப்பு நாளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற நாடு தழுவிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. கீழவாசல் கட்டுமான சங்கம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மாலை நேர காய்கறி அங்காடி ,அரண்மனை ஆட்டோ ஸ்டாண்ட், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்து குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, அரசு போக்குவரத்து சங்க கௌரவ தலைவர் கே.சுந்தரபாண்டியன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தலைவர் எம்.பாலவடிவேலன், பொருளாளர் என்.இளஞ்செழியன்.

நிர்வாகி கருணாகரன், உடல் உழைப்பு சங்க நிர்வாகிகள் ம.விஜயலட்சுமி,பி.சுதா, கே.கல்யாணி, எம் .சிகப்பி அம்மாள், ஏஐடியூசி நிர்வாகிகள் பி.செல்வம் டி.தங்கராசு அ.இருதயராஜ், எஸ்.மனோகரன், ரெஜினால்டு ரவீந்திரன், எம்.பாலமுருகன், சுடலைமுத்து, ஆட்டோ சங்க நிர்வாகி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business