தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
X
பணியாற்றி வந்த ஊழியர் திடீரென ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம்மோசடி செய்தவர் மீது வழக்கு.

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர் ராமமூர்த்தி ( 41) மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

பைனான்ஸ் நிறுவனத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தட்சன்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் (32) பணிபுரிந்து வந்தார். இவர் ராஜினாமா செய்வதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. மேலும் மணிகண்டன் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 203 மோசடி செய்துள்ளார். இது குறித்து கேட்க அவரை தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!