தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த விவகாரம் : மேலும் ஒரு சப் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை  விற்பனை செய்த விவகாரம் : மேலும் ஒரு சப் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
X

பைல் படம்

தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த விவகாரத்தில் போலீஸ் எஸ்பி மேலும் ஒரு சப் - இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில், சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விற்கப்பட்ட 434 மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆனால், முறையாக வழக்குப் பதிவு செய்து, தொடர்புடைய நபரை கைது செய்யாமல், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை, வேறொருவர் மூலம் விற்று, அந்த பணத்தை போலீசார் பங்கு போட்டுக் கொண்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். ஸ்டேஷன், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தஞ்சை டி.ஐ.ஜி.,யிடம் அறிக்கை அளிக்கப்பட்டு, டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, எஸ்.ஐ., ராஜ்மோகன், எஸ்.எஸ்.ஐ., துரையரசன், ஏட்டு ராமமூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தொடர் விசாரணையில், மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக, எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு அறிக்கை அனுப்பாமல் மறைத்த, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெத்தபெருமாளை, எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய், சஸ்பெண்ட் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!