குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
X

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன்( 45).இவரது மனைவி புவனா (40). இவர்களுக்கு அக்ஷயா (13) ஹேமாஸ்ரீ (10) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கட்டயங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக புவனாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனா‌ல் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன வேலையை விட்டு விட்டு வீட்டிலிருந்து மனைவி, குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கட்டயங்காடு கிராமத்தில் புதிதாக துவங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மதிவாணன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த புவனா தென்னை மரத்து வண்டுகளை அழிக்க பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி வந்து தண்ணீரில் கரைத்து வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும் எனக்கூறி அவரும் குடித்துவிட்டு, இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.இரவு மதிவாணன் வந்து பார்த்த போது மூவரும் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் புவனாவும், அக்ஷயாவும், இறந்தனர். ஹேமாஸ்ரீ ஆபத்தான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!