தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
மதுக்கூரில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட செயல்பாடுகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அருகில் மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அண்டமி ஆவிக்கோட்டை,பாவாஜி கோட்டை, கீழ குறிச்சி, நெம்மேலி, பாலோஜி, ரகுநாத சமுத்திரம், களிச்சாங்கோட்டை, கன்னியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் பேஷ்4 திட்டத்தின் கீழ் வருகின்றன.
அதேபோல புலவஞ்சி, மதுரபாசாணிபுரம், பெரிய கோட்டை, புளியக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பேஸ் ஒன்று திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உலக வங்கி உதவியுடன் குறைந்த நீரில் கூடுதல் லாபம் என்ற நோக்கில் நெல்லில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், உளுந்து நிலக்கடலை மக்காச்சோளம் குதிரைவாலி உள்ளிட்ட பயிர்களுக்கு விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அத்தகைய விவசாயிகளின் செயல் விளக்க தளைகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா மதுக்கூர் வட்டாரத்தில் ஒலையகுன்னம் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது குறைந்த அளவு நீரில் அதிக லாபம் தரக்கூடிய மக்காச்சோளம் குதிரைவாலி போன்றவை சாகுபடி செய்துள்ள ஒலையகுன்னம் விவசாயிகள் ரஜினி குமார், வளர்மதி மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அழகிரி பாண்டியன் மற்றும் கலியமூர்த்தி ஆகியோருடன் தற்போதைய பயிர் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு குறைந்த அளவு நீரில் குறைந்த அளவு இடுபொருள் செலவில் உணவு உற்பத்தியை பெருக்கிடவும் கேட்டுக்கொண்டார்.
உலக வங்கி ஆய்வு நடைபெற இருப்பதால் வேளாண் உதவி அலுவலர்கள் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட பணிகளை சரியான முறையில் ஆவணப்படுத்திட கேட்டுக் கொண்டார். வேளாண்மை அலுவலர் இளங்கோ மற்றும் உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோரிடம் தற்போதைய கோடை பயிர் சாகுபடிக்கான உளுந்து மற்றும் நெல் விதைகள் இருப்பு மற்றும் தேவை பற்றி கேட்டறிந்தார்.
இன்றைய தினம் வயல் வாரியாக செயல் விளக்க தளைகளின் நிலையினை லேட்லாங்குடன் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ராமு தினேஷ் மற்றும் முருகேஷ் ஆவணப்பணியினை மேற்கொண்டனர். அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி ராஜு சிசிதிட்ட அலுவலர் இளமாறன் மற்றும் வைஷாலினி ஆகியோர் உடன் ஒருங்கிணைத்தனர்.
ஒலயகுன்னம் விவசாயிகள் இந்திராணி, பாவாஜி கோட்டை சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு தேவையான சித்திரைப் பட்ட உளுந்து விதைகள் நேரத்தே கிடைக்க ஆவண செய்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பயிர்வாரியான செயல் விளக்க தளைகள் தற்போதைய பயிரின் நிலை மண்புழு தொட்டிகளின் நிலை பற்றி எடுத்துக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu