விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!
விதை கிராம குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், ஆவி கோட்டை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தமிழ்நாடு நீர்வள நிலத்திட்டம் பகுதி நாளின் கீழ் அமைக்கப்பட்ட பசுந்தாளுர விதை கிராம குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இதில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கலந்து கொண்டு விதை கிராமத்திட்ட குழுக்கள் அமைத்தல் பசுந்தாளுரம் மற்றும் உளுந்து கடலை விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்தல் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.
மேலும் விதைப்பண்ணை அமைப்பதன் நோக்கம் வழிமுறைகள் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் நிலம் தயார் செய்தல் உயிர் உரங்கள் பயன்பாடுகளின் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார். ஆவிக்கோட்டை பசுந்தாளுர விதை கிராம குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொருளாளர் வர்ஷா முத்துசாமி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விதை கிராமம் என்றால் என்ன?
விதை கிராமம் என்றால் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பயிற்சியளிக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர் விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த விலையில் விதைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
கருத்துக்கள்
- விதைகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யலாம்
- பழைய இரகங்களுக்கு பதிலாக புதிய இரகங்களை மாற்றம் செய்யலாம்
- விதை உற்பத்தியை அதிகரிக்கலாம்
- உள்ளூர் தேவைக்காக தகுந்த நேரத்தில், தகுந்த விலையில் விதைகளை விநியோகம் செய்யலாம்
- கிராமங்களில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு அடையலாம்
- விதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கலாம்
சிறப்பியல்புகள்
- அனைத்துப் பண்ணைகளிலும் உரிய நேரத்தில் விதைகள் கிடைக்கும்
- சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள் கிடைக்கும்
- விவசாயிகள் சுயமாக விதைகளை உற்பத்தி செய்வதால் அவர்களிடம் தரத்தின் மேல் அதிகப்படியான தன்னம்பிக்கை அடைந்துள்ளனர்
- விற்பனையாளர் மற்றும் நுகர்வோர், இதனால் சமமாக பயன் அடைந்துள்ளனர்
- புதிய வகையான ரகங்களை அனைவருக்கும் உடனடியாக கிடைக்கச் செய்கின்றன
விதை கிராமத்தின் பயன்கள்
தடுப்பு இடைவெளியைக் குறைத்தல், அயல் மகரந்தச் சேர்க்கை பயிர்களான மக்காச்சோளம் மற்றும் சூரிய காந்தி போன்றவற்றில் தடுப்பு இடைவெளி அதிகம் தேவைப்படுகிறது. எனவே இப்பயிர்கள் பயிரிடும்போது அப்பகுதி முழுவதும் ஒரே இரகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- எனவே பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும்.
- விதை அறுவடைக்குப் பின் கையாலுவது சுலபமாகும்.
- இவ்வாறு ஒரே இரகத்தை பயிரிடும் போது, அறுவடைக்குப் பின் உலர்த்துதல், பதப்படுத்துதல் போன்ற செயல்களின் போது பல இரக விதைகள் ஒன்றோடொன்று கலப்பது தவிர்க்கப்படுகிறது.
- விதை சான்று கண்காணிப்பாளர், பெருமளவு பரப்பை கண்காணித்தல் எளிது.
- இடுபொருள் செலவு குறைகிறது.
- கலப்படமற்ற தூய விதைகள் கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu