சிரமேல்குடி கிராம வேளாண்மை முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!

சிரமேல்குடி கிராம வேளாண்மை முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!
X

உயிர் உரங்கள் பெற்றுக்கொண்ட விவசாயிகள் 

மதுக்கூர் வட்டார சிரமேல்குடி கிராம விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுக்கூர் வட்டாரம் சிரமேல் குடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிரமேல்குடி பஞ்சாயத்துக்கான கிராம வேளாண்மை முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழிகாட்டுதலில் அட்மா திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. சிரமேல்குடி வேளாண்மை உதவி அலுவலர் சுரேஷ் இந்த நிதியாண்டில் சிரமேல் குடி கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் அதற்கான மானியங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

மேலும் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் பசுந்தாளுர விதைகள் மற்றும் நெல் நுண்ணூட்டம் திரவ உயிர் உர மண்புழு உர தொட்டிகள் வேம்பு மற்றும் நொச்சி க்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுவது குறித்து விளக்கி கூறினார்.


அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துகளின் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் கதிரி ஜி ஜி 34 போன்ற சான்று பெற்ற நிலக்கடலை விதைகள் மானியத்தில் தற்பொழுது இருப்பில் உள்ளது பற்றியும் எடுத்துக் கூறினார்.

அட்மா திட்ட உதவி அலுவலர்கள் அய்யா மணி, ராஜு ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட தொடர்பு விவசாயி அழகிரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் உயிர் உரங்களை 50 விவசாயிகளுக்கு வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!