தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர், மதுக்கூர் வட்டார வேளாண் பணிகளை கள ஆய்வு..!
மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்..வழங்கிய தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன். அருகில் மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள்..தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வழங்கினார்
மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு களப்பணி ஆய்வுக்காக வருகை புரிந்த மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் தாளடி பருவத்திற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விதை நெல்களில் ரகம் அவற்றின் பயிரிடும் காலம் மானிய விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் நெல் நுண்ணூட்டம் சூடோமோனஸ் மற்றும் திரவ உயிர் உரங்களின் தரம் மற்றும் நெல் விளைச்சலில் இவற்றின் பங்கு பற்றி வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெரால்டு தினேஷ் ராமு மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
பின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்ட செயல் விளக்க இடுபொருட்களை பெரிய கோட்டை மற்றும் கோபாலசமுத்திரம் மற்றும் வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன் கஜேந்திரன் இளமாறன் உள்ளிட்டோருக்கு மானியத்தில் வழங்கினார்.
விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டம் சூடோமோனஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் பயனுள்ளதாய் இருப்பதை குறித்து நேரடியாக விவசாயிகளிடம் கேட்டு அறிந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் ஜெகதீஷ் கலையரசன் முருக லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
அட்மாத்திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். ஆய்வின் போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாரன் மதுக்கூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu