தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மனோரா கலங்கரையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணியினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊராட்சிஒன்றியங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டுஆய்வுசெய்து கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சின்னமனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்டநிர்வாகம், மாவட்டபசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்குஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மனோரா கலங்கரையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சர்பேந்திரராஜபட்டிணத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா மாளிகை கட்டிடத்தின் கட்டுமான பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலடிக்குமுளை ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஆலடிக்குமுளை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அமைக்க உள்ள இடமும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் ராதிகா மைக்கேல், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிபொறியாளர்கள் மணிமேகலை, சுரேஷ் ,வட்டாட்சியர் ராமச்சந்திரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு தலைவர் கி. முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu