தஞ்சாவூரில் அசத்தும் இளைஞர்கள்! காலை உணவு இலவசம் - மதிய உணவு 5 ரூபாய்!

தஞ்சாவூரில் அசத்தும் இளைஞர்கள்! காலை உணவு இலவசம் - மதிய உணவு 5 ரூபாய்!
X

தஞ்சாவூர் இளைஞர்கள் வழங்கும் உணவை பெற கூடிய ஏழைகள் கூட்டம்.

தஞ்சாவூரில் ஏழைக்கள் வசதிக்காக இளைஞர்கள் சார்பல் காலையில் இலவச உணவும், மதிய உணவு ரூ.5க்கும் வழங்கி அசத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் தமிழகத்தில் பல சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் ஹோட்டல் நடத்திவரும் சிவா என்ற இளைஞர் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.

இவர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலை உணவாக இட்லி, இடியாப்பம், தோசை போன்றவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலம் வரை இந்த சேவையை வழங்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா