நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு உயிரி உரங்கள், பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துங்க : மாவட்ட வேளாண் இயக்குனர்..!

நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு உயிரி உரங்கள், பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துங்க : மாவட்ட வேளாண் இயக்குனர்..!
X

நெல் வயல்வெளி பள்ளி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, பயிற்சி கையேடு குறிப்பேடு மற்றும் பேனாக்களை தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா வழங்கினார். அருகில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

மதுக்கூர் வட்டார வேளாண்மைத் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு செய்தார்.

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டங்கள் பயிர் வாரியாக நெல் பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முசிறி கிராமத்தில் நடைபெற்ற நெல் வயல்வெளி பள்ளிபயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் நஞ்சில்லா உணவு உற்பத்தியில் உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் மூலிகை பூச்சி விரட்டிகளின் நன்மை பற்றி எடுத்து கூறி விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு குறிப்பேடு மற்றும் பேனாக்களை வழங்கினார்.


பின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யவுள்ள விவசாயிகளுக்கு வம்பன்8 சான்றுவிதைகளை வழங்கினார். வயல் வெளிப்பள்ளி பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆலத்தூர் வேளாண்மை உதவி அலுவலர் ராமு மற்றும் ஆலத்தூர் துணை ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாட்சரம் செய்திருந்தார்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு சி சி பணியாளர் ரம்யா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். சிரமேல்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் நெல்லின் கீழ் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க விவசாயிகளுக்கு கடல்பாசிஉரம் 12.5 கிலோ , நானோ யூரியா 500 மிலி, வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய 3 கிலோ வம்பன்8 விதைகளை 33 விவசாயிகளுக்குவழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் மற்றும் சிரமேல்குடி கிடங்கு மேலாளர் முருக லட்சுமி செய்திருந்தனர்.பின் அத்திவெட்டி கிராமத்தில் தென்னை இயற்கை விவசாயிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாய குழுவுக்கு தேவையான நாட்டு சர்க்கரை மற்றும் நாட்டு மாடு ஒவ்வொரு உறுப்பினரும் வாங்குவதற்கு உரிய வழிவகைகளை விளக்கி கூறினார்.


பின் அத்திவெட்டியை சேர்ந்த 20 விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ ஜிங்க்சல்பேட்உரத்தினை மானியத்தில் அத்திவெட்டிகோவில் வளாகத்தில் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்தி வெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி பொருளாளர் வடிவேல் மூர்த்தி செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிரமேல்குடி வேளாண்மை உதவி அலுவலர் சுரேஷ்ஆகியோர் செய்திருந்தனர்.

பின் வேப்பங்குளம் கலைஞர் திட்ட கிராமத்தில் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள அங்கக வேளாண்மை மாதிரி திடலில் மேற்கொள்ளப்பட்ட மீன்அமினோஅமிலம், அமுத கரைசல், மூலிகைபூச்சி விரட்டி மற்றும் மண்புழுஉர தொட்டிகளையும் ஆய்வு செய்ததோடு இயற்கை உர கரைசலால் ஏற்படும் விளைச்சல் மாற்றங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு பூமிநாதன் சுரேஷ் ராமு தினேஷ் ஆகியோரிடம் நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை கேட்டறிந்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி திட்ட செயல்பாடுகள் பற்றி வேளாண்மை இணை இயக்குனரிடம் விளக்கி கூறினார்.

Tags

Next Story
best ai tools for digital marketing