பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுசெய்யப்பட்டது. இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தஆய்வுக் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்பிரபாகர், பட்டுக்கோட்டை ஒன்றியக் குழுதலைவர் பழனிவேல், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உதவிஇயக்குனர் ஊராட்சிகள் சங்கர், துணைத் தலைவர் லே.முருகானந்தம், வட்டாரவளர்ச்சிஅலுவலர்கள் கே.சாமிநாதன், கை.கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!