தரிசு நிலத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியம்..! வாங்க..பயன்படுத்துங்க..!
தரிசு நிலம் (கோப்பு படம்)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்பட உள்ளது என்று வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களில் சாகுபடிக்கு கொண்டு வருபவர்களுக்கு ஒரு எக்டருக்கு 50% மானியம் அல்லது ரூபாய் 9600 இதில் எது குறைவோ அது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட உள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் பதிவேட்டில் இதர தரிசு நிலம் மற்றும் பயிரிடுவதற்கு ஏற்ற தரிசு நிலங்களை மட்டும் கண்டறிந்து அந்நிலத்தில் உள்ள முட்புதர்கள் மரங்கள் சிறு கற்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும் நிலத்தினை சமன் செய்து உழவு பணி மேற்கொள்வதற்காகவும விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட தரிசு நிலத்தை உடைய விவசாயிகள் தாங்களாகவும் அல்லது வாடகை இயந்திரங்கள் மூலமாகவோ தங்கள் நிலத்தில் உள்ள முட்புதர்கள் சிறு கற்கள் போன்றவற்றை நீக்கி சமன் செய்து உழவு மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக எக்டருக்கு ரூபாய் 9600 அல்லது விளைநிலமாக மாற்றுவதற்கான செலவினத்தில் 50 சதவீதம் எது குறைவோ விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமம் செய்து உழவு முடித்தபின் நீர் ஆதாரம் கிடைக்கும் வரையில் மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்ட விபரத்தினை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் இத்திட்டம் செயல்படுத்தியதற்கு கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட முந்தைய ஆண்டு அடங்கல் நகல் மற்றும் நடப்பாண்டு அடங்கல் நகல் முட்புதர் அகற்றிய நிலை உழவு செய்த புகைப்படம் நிலத்தை சமப்படுத்திய புகைப்படம் ஜியோ டேக் செய்து உரிய பயனாளியுடன் வேளாண் உதவி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் உழவர் செயலியில் மேற்கூறிய திட்டத்தின் கீழ் நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம். புகைப்படங்கள்
திட்டம் செயல்படுத்துவதற்கு முன் பின் என இரண்டு நிலைகளில் எடுப்பதுடன் சாகுபடி அடங்கல் கம்ப்யூட்டர் சிட்டா ஆதார் மற்றும் விவசாயின் பாஸ்புக் நகல் ரேஷன் கார்டு நகலுடன் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு நிர்மாணித்த தொகையான புல்டோசர் மூலம் முள் புதர்களை அகற்றிட ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 1500 வீதம் 5 மணி நேரத்துக்கு ரூபாய் 7500 மேலும் புல்டோசர் கொண்டு நிலத்தை சமப்படுத்திட ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1500 வீதம் 5 மணி நேரத்துக்கு ரூபாய் 7500 யும் இந்நிலத்தை சமப்படுத்திய வயலில் ஆறு மணி நேரம் உழவு மேற்கொள்ள ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 700 வீதம் ரூபாய் 4200 ஆக மொத்தம் விவசாயி செலவினம் மேற்கொள்ளும் மொத்த தொகையான 20000 த்தில் 50% மானியம் அல்லது ரூபாய் 9600 எது குறைவோ அது வழங்கப்படும்.
அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு திட்டத்தின் கீழ் இரண்டு எக்டர் வரை உழவு பணிகளுக்கான மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி மேலும் உதவி அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண் உதவி இயக்குனரை அணுகு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விவசாயிகள் தற்போது உள்ள இயற்கை சூழல் மற்றும் மழை பெறுவதனை அடிப்படையாகக் கொண்டு தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விரைந்து செயல்பட்டு உணவு உற்பத்தியை பெருக்குவதனன் அவசியத்தை உணர்ந்து மானியத்துடன் பயன் பெறலாம் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu