வேப்பங்குளம், கருப்பூர் விவசாயிகளுக்கு முன்பருவ பயிற்சி..!

வேப்பங்குளம், கருப்பூர் விவசாயிகளுக்கு முன்பருவ பயிற்சி..!
X

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உயிர் உரங்கள். அருகில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட விவசாயிகளுக்கு முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது.

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் வேப்பங்குளம் மற்றும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு முன் பருவ பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்து முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலமாக மானியத்தில் வழங்கவிருக்கும் பசுந்தாள் உர விதைகள், உற்பத்தி முறைகள் மற்றும் பசுந்தாள் உற்பத்தி செய்வதால் மண்ணிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், இயற்கை இடுபொருட்களான மீன் அமிலம், அமிர்த கரைசல், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்து பயிர் சாகுபடி செலவினை முற்றிலும் குறைத்து மண் வளத்திணையும் உடல் நலத்தினையும் மேம்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.


மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மண் வள அட்டை இயக்கம்24ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் திரவ உயிர் உரம் 100 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் இளங்கோ நெல் பயிருக்கு மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட அளவின் அடிப்படையில் சாகுபடி செய்தல் குறித்தும் மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா, திரவ உயிர் உரம் பயன்படுத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறினார். பயிற்சியின் நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜெரால்ட் மற்றும் .ராமு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


பயிற்சிக்கான ஏற்பாட்டினை வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர், உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்திருந்தனர்.

பயிற்சியில் வேளாண் விரிவாக்க மையம் ஆலத்தூர் மற்றும் கீழ குறிச்சி கிடங்கு மேலாளர்கள் கலையரசன் மற்றும் ஜெகதீசன் கலந்து கொண்டு திரவ உயிர் உரங்களை விநியோகித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!